×

திருமயம் அருகே மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி

 

திருமயம்,ஜூலை 4: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சிவபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அமைச்சூர் பளுதூக்கும் சங்கம் சார்பில் பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியானது ஜூனியர் ஆண்கள், பெண்கள், ஜூனியர் ஆண்கள் என்ற பிரிவுகளில் நடத்தப்பட்டது. போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்களில் இருந்து சுமார் 70 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியானது பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் பளு தூக்கி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இறுதியாக போட்டியின் மூன்று பிரிவுகளிலும் முதல் இடங்களை பெற்றவர்களுக்கு மாவட்ட சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

The post திருமயம் அருகே மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,District Minister's Weightlifting Association ,Thirumayam Sivapuram ,Pudukottai ,Dinakaran ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...